விருந்தினர்களுக்கு , அவர்களின் வகைபாடு மற்றும் வருகைக்கான காரணத்தின் அடிப்படையில் நான்கு விதமான கட்டணங்கள் விதிக்கப்படுகிறது. அதன் விபரங்கள் வருமாறு.

  • சலுகை : தமிழ்நாடு சட்ட சபை உறுப்பினர்கள், தமிழ்நாடு பிரிவு சார்ந்த இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்றும் இந்தி வனப்பணி அதிகாரிகள், தமிழ்நாடு அரசு ஊழியர்கள், தமிழ்நாடு அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், அரசு அதிகாரிகள் அல்லாமல் அரசால் நியமிக்கப்பட்டு பணியாற்றும் குழு சார்ந்த தலைவர்கள் அல்லது உறுப்பினர்கள் ஆகியோர் அலுவல் வேலையாக தங்குவதற்கு மட்டும் இச்சலுகை கட்டணம் பொருந்தும்.
  • இடைநிலை : மத்திய அரசு அலுவலர்கள் அலுவல் வேலையாக தங்குவதற்கு மட்டும் இக்கட்டணம் பொருந்தும்.
  • மற்றவர்கள்: மேற்குறிப்பிட்ட மாநில அரசு மற்றும் மத்திய அரசு அலுவலர்களையும் சேர்த்து அனைத்து தரப்பினரும் சொந்த வேலையாக தங்குவதற்கு இக்கட்டணம் பொருந்தும்.
  • தகுந்த பருவம் மற்றும் சாதாரண பருவம்: ஏப்ரல், மே, ஜுன், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் தகுந்த பருவகாலமாகும். இதர மாதங்கள் சாதாரண பருவ காலமாகும்.


  வகை சலுகை இடைநிலை இதர
உகந்த பருவம் 150 1000 1500
சாதாரண பருவம் 100 750 1000


பொதுத்துயிற்கூடம் (ஒரு நபர் / படுக்கை)

  விவரம் சலுகை இடைநிலை இதர
உகந்த பருவம் 100 150 300
சாதாரண பருவம் 75 100 225


கூட்ட அரங்ககிற்கான கட்டணம் - நாள் ஒன்றுக்கு

வ.எண் வகைப்பாடு கட்டணம்
1 மாநில அரசு தொடர்பான கூட்ட நடவடிக்கைளுக்காக (நாள் ஒன்றுக்கு) 3500
2 மாநில அரசு அல்லாத கூட்ட நடவடிக்கைகள் (ம) தனியார் அமைப்புகள் தொடர்பான கூட்ட நடவடிக்கைகள் (நாள் ஒன்றுக்கு) 10000